தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 6) சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் நெய் குப்பை கிராமத்தில், வாக்குக்கு பணம் கொடுப்பதாக, தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
அத்தகவலின் அடிப்படையில், பறக்கும் படை குழுவை சேர்ந்த முத்துக்குமார் தலைமையிலான குழுவினர், நெய் குப்பையை சேர்ந்த சிலம்பரசன், ரவி ஆகிய இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர்.
பின் அவர்களிடம் வாக்குக்கு பணம் கொடுக்க வைத்திருந்த ரூ 27,430 பணத்தை கைப்பற்றினர். மேலும் அவர்கள் இருவரையும் வி.களத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் போதை மாத்திரைகள் கடத்தியவர் கைது!