பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அருகில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர் 7ஆம் தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
அதன்படி ஓட்டுநருக்கான அடிப்படைத் தகுதிகளில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத்தேர்வு அன்று 23 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162 .5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று பேஜ் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பேஜ் வாகனம் உரிமை எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் 13,260 ரூபாய் ஆகும்.
மருத்துவக் உதவியாளர்களுக்கான அடிப்படைத் தகுதிகளில், பிஎஸ்சி நர்சிங் அல்லது GNM, ANM, D.Pharm, DMLT ( பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) Life science Graduates (B.sc Zoology, Botany, Bio chemistry, Micro Biology, Plant Biology), 20 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத சம்பளம் 13,760 ரூபாய் ஆகும்.