ETV Bharat / state

மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி பிளேடால் உடம்பை அறுத்துக்கொண்ட இளைஞர்! - tiruchengode police station

நாமக்கல்: திருச்செங்கோடு காவல் நிலையம் முன்பு மதுபோதையில் இளைஞர் ஒருவர், பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி பிளேடால் உடலை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டச் செய்திகள்  திருச்செங்கோடு இளைஞர்  nammakal district news  tiruchengode police station  tiruchengode cutting his body
மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி பிளேடால் தனது உடம்பைக் கீறிக்கொண்ட இளைஞர்
author img

By

Published : Aug 12, 2020, 6:42 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அப்பூர்பாளையம், பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கும் இவரது மனைவி வாசுகிக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், கூட்டப்பள்ளியிலுள்ள உறவினர் வீட்டில் வாசுகி வசித்துவந்தார். இதையறிந்து நேற்று (ஆகஸ்ட் 11) அங்கு அரிவாளுடன் சென்ற சசிகுமார், தன்னுடன் வரும்படி வாசுகியை மிரட்டியுள்ளார்.

இது குறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் வாசுகி புகார் அளித்தார். இதையடுத்து திருச்செங்கோடு காவல்துறையினர் சசிகுமாரை எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில், மீண்டும் கூட்டப்பள்ளி சென்ற அவர், தனது மனைவி குன்னூரிலுள்ள தாய் வீட்டிற்குச் சென்ற செய்தியை அறிந்துள்ளார்.

பிளேடால் தனது உடம்பைக் கீறிக்கொண்ட இளைஞர்

இதன்பின்னர், மதுபோதையில் திருச்செங்கோடு நகர காவல் நிலையம் முன்பு அமர்ந்து, பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி பிளேடால் தனது உடம்பின் கழுத்து, மார்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுத்துக்கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி பிளேடால் இளைஞர் ஒருவர் தனது உடலையே அறுத்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட தகராறு: கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.