ETV Bharat / state

மின்சாரம் செலுத்தி மனைவியை கொலை செய்ய முயற்சி: 5 மாதம் கழித்து இளைஞர் கைது

நாமக்கல்: மனைவியை மின்சாரம் செலுத்தி கொலை செய்ய முயன்ற இளைஞரை ஐந்து மாதங்களுக்கு பிறகு காவல் துறையினர் கைது செய்தனர்.

சிவபிரகாசம்
author img

By

Published : Nov 6, 2019, 9:29 AM IST

நாமக்கல் நகராட்சிக்குள்பட்ட ராமாபுரபுதூர் அடுத்துள்ள அன்புநகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் ரூபிகாவிற்கும் கரூர் மாவட்டம் மூலிமங்களத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான சிவப்பிரகாசம் என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரை பிரிந்து ரூபிகா நாமக்கல்லில் உள்ள தாய் வீட்டில் வசித்துவந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அதிகாலையில் மனைவியைப் பார்க்க நாமக்கல் வந்த சிவப்பிரகாசம் மனைவி ரூபிகாவை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். இருப்பினும் ரூபிகா சமாதானம் ஆகவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவப்பிரகாசம் ரூபிகாவின் வீட்டின் அருகிலிருந்த மின்மாற்றியிலிருந்து மின்சாரம் எடுத்து வீட்டின் ஜன்னலில் இணைத்து ரூபிகாவை கொலை செய்ய திட்டமிட்டு விட்டு தலைமறைவாகியுள்ளார்.

வீட்டின் பின்புறம் சென்ற மருமகன் வெகுநேரமாகியும் காணாததால் சந்தேகமடைந்த ரூபிகாவின் தாயார் வளர்மதி அவரைத் தேடி வீட்டின் பின்புறம் சென்றபோது, சந்தேகத்திற்கு இடமாக மின்சார ஒயர்கள் கிடப்பதைக் கண்டு அருகில் இருந்தவர்களை அழைத்து காண்பித்தபோது, மின்மாற்றியிலிருந்து ஜன்னலுக்கு மின்இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே அந்த மின்இணைப்பைத் துண்டித்து தனது மருமகன் மீது நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தங்கவேல் வீட்டின் முன்பு உள்ள மின்மாற்றி

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிவப்பிரகாசம் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்நிலையில் ஐந்து மாதங்களுக்கு பிறகு பெங்களூருவில் தலைமறைவாக இருந்த சிவபிரகாசத்தை நாமக்கல் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 2018ஆம் ஆண்டு மாமனார் தங்கவேலுவை தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை முயற்சி நடந்த தங்கவேல் வீடு

இதையும் படிங்க: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் கொலை - காதலனுடன் மகள் கைது

Intro:நாமக்கல்லில் தாலிக்கட்டிய மனைவியை மின்சாரம் தாக்கி கொலை செய்ய முயன்ற கணவனை 5 மாதங்களுக்கு பிறகு கைது செய்த நாமக்கல் போலீசார்..Body:நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட ராமாபுரபுதூர் அடுத்துள்ள அன்புநகர் ஸ்கீம் மூன்று, சாவடி தெருவில் வசித்துவந்த தங்கவேல் வளர்மதி தம்பதியரின் மகள் ரூபிகாவிற்கும் கரூர் மாவட்டம் மூலிமங்களத்தை சேர்ந்த மென்பொறியாளரான சிவப்பிரகாசம் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ரூபிகா நாமக்கல்லில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி அதிகாலையில் மனைவியை பார்க்க வந்த சிவப்பிரகாசம் மனைவி ரூபிகாவுடன் சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். இருப்பினும் ரூபிகா சமாதானம் ஆகவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவப்பிரகாசம் ரூபிகாவின் வீட்டின் அருகிலிருந்த மின்மாற்றியிலிருந்து மின்சாரம் எடுத்து வீட்டின் ஜன்னலில் இணைத்து மின்சாரம் பாய்ச்சியுள்ளார்.ஜன்னலை தொடும்போது ரூபிகா மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் வகையில் இணைப்பு கொடுத்துவிட்டு சிவப்பிரகாசம் வீட்டிலிருந்து சென்று தலைமறைவானார். அப்போது ரூபிகாவின் தாய் வளர்மதி வீட்டை விட்டு வெளியே வந்த பார்த்தபோது வீட்டின் அருகே சந்தேகப்படும் படி மின்சார ஒயர்கள் கிடப்பதை கண்ட தாய் வளர்மதி அருகில் இருந்தவர்களின் உதவியுடன் மின் இணைப்பை துண்டித்து தனது மருமகன் மீது நாமக்கல் கால்நிலையத்தில் புகார் அளித்தார்.

சிவப்பிரகாசம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சிவப்பிரகாசத்தை கடந்த ஐந்து மாதங்களாக தேடி வந்த நிலையில் இன்று பெங்களூரில் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த சிவப்பிரகாசத்தை நாமக்கல் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர். இவர் மீது கடந்த 2018ம் ஆண்டு மாமனார் தங்கவேலுவை தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.