ETV Bharat / state

கரோனா ஊரடங்கால் தவிக்கும் பெண் ஆட்டோ ஓட்டுநர்: உதவி செய்யுமா அரசு? - Namakkal district news

நாமக்கல்: கரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வரும் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் உஷா குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

பெண் ஆட்டோ ஓட்டுநர் கதை
பெண் ஆட்டோ ஓட்டுநர் கதை
author img

By

Published : Aug 22, 2020, 12:05 AM IST

Updated : Aug 22, 2020, 5:38 PM IST

பெண்கள், ஆண்களுக்கு நிகராக எத்தனையோ துறைகளில் சாதித்து வருகின்றனர். ஆனால் ஆட்டோ ஓட்டும் தொழிலில் பெண்களின் பங்களிப்பு சற்று குறைந்தே காணப்படுகிறது. அதற்கு காரணம் இந்த தொழிலில் உள்ள பாதுகாப்பாற்ற சூழல்.

இப்படியிருக்க தன்னம்பிக்கையினால் நாமக்கல் மாவட்டம் தூசூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி உஷா (45) முதல் பெண் ஆட்டோ ஓட்டுநராக வலம் வருகிறார். இவரின் மகளுக்கு அண்மையில் திருமணமாகி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாததால் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடனாக பணம் பெற்று, ஆட்டோ வாங்கி ஒரு வருடமாக அதை ஓட்டி வருகிறார்.

பெண் ஆட்டோ ஓட்டுநர் கதை

ஆட்டோ ஓட்டும் ஆர்வம் குறித்து உஷா கூறும்போது, "ஆண் குழந்தை பிறக்கும் என நம்பிக்கையில் இருந்த எனது தந்தைக்கு மூன்றும் பெண் குழந்தைகளாக பிறந்தோம். கடைசியாக பிறந்த என்னை ஒரு ஆண் குழந்தை போல் பாவித்து தந்தை வளர்த்தார். மேலும் ஆட்டோ, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்க தந்தை கற்றுக் கொடுத்தார். கணவரின் லாரி ஓட்டும் தொழிலில் போதிய வருமானம் இல்லை. எனவே, தனியார் நிதி நிறுவனத்தில் கடனாக பணம் பெற்று ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறேன்" என்றார்.

கரோனா பொதுமுடக்கம் ஆட்டோ தொழிலை கடுமையாக பாதித்து விட்டது. கரோனாவுக்கு முன், உஷா தினசரி 2 ஆயிரம் ரூபாய் வருவாய் சம்பாதித்துள்ளார். தற்போது 100 ரூபாய் வருமானம் கூட கிடைக்காமல் தவித்து வருகிறார். உஷா ஆட்டோ வாங்கியதற்கு சரிவர தவணை தொகையும், வட்டியும் செலுத்த முடியாமல் இருப்பதால், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கரோனா முடிவுக்கு வரும் வரை வங்கியில் வட்டி தொகை வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உஷா குறித்து சக ஆட்டோ ஓட்டுநர்கள் பேசுகையில், "துறையூர் சாலையில் ஆட்டோ ஓட்டுநர் உஷா மிகவும் பிரபலமானவர். ஆட்டோவை மிகவும் பாதுகாப்பாக இயக்குவதோடு பயணிகளிடம் மிகவும் கண்ணியமாக நடத்தி வருகிறார்" என்கின்றனர்.

இதையும் படிங்க: 2 நாள்களாக ஆம்புலன்ஸ் வரவில்லை; கரோனா நோயாளியை ஆட்டோவில் அனுப்பிவைத்த ஊர் மக்கள்

Last Updated : Aug 22, 2020, 5:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.