நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்திற்கு அருகே பீமநாயக்கனூரில் உள்ள பெருமாள் கோயிலில் சுமார் 2,800 பேர் வழிபட்டுவருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கோயிலில் உள்ள பூசாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த பூசாரியை சிலர் அரிவாளால் வெட்டினர்.
இச்சம்பவத்தால் மாவட்ட சார் ஆட்சியாளர் திருவிழாவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மேலும் எருமப்பட்டி காவல் துறையினர்தொடர்ந்து அந்த பகுதியைக் கண்காணித்து வரவும் உத்தரவிட்டார்.
"தற்போது மீண்டும் பூசாரி தன்னிச்சையாக ஒரு சிலரை மட்டும் வைத்துக்கொண்டு திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் வெளியூரில் வசிப்பதால் திடீரென்று திருவிழா நடத்த வேண்டாம்" என்று ஒரு தரப்பு கிராம மக்கள் சார் ஆட்சியாளர் கிரந்தி குமார் பதியிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
மேலும் அந்தமனுவில், 'வழக்கை விசாரித்து வந்த எருமப்பட்டி காவல்நிலையத்தில் மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மாதையன், திருவிழாவை தடுத்தால் பொய்வழக்கு பதிவு செய்வேன்' எனமிரட்டியதாகவும் கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.