நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள குண்டுனிநாடு கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகாலமாக மக்களின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி, மருத்துவமனை வசதி என எவ்வித வசதிகளும் இல்லை, இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சந்திரகலா கூறுகையில், “பல ஆண்டுகளாக குண்டுனிநாடு பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. நோயாளிகளையும் கர்ப்பிணி பெண்களையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல டோலி கட்டி சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு மலைப்பகுதியிலிருந்து இறங்கிவர வேண்டிய நிலை உள்ளது.
இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இது குறித்து அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் காரணமாக தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்ற மூதாட்டி