ETV Bharat / state

2050ஆம் ஆண்டில் கால்நடை உற்பத்தி மூலம் 70 சதவீதம் உணவு பொருட்கள் கிடைக்கும்!

நாமக்கல்: 2050ஆம் ஆண்டில் பொது மக்களுக்குத் தேவையான உணவு பொருட்கள் 70 சதவீதம் கால்நடை உற்பத்தி மூலமாக கிடைக்கும் சூழ்நிலை உள்ளது என தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

veterinary vc conference
துணை வேந்தர் டாக்டர் பாலசந்திரன்
author img

By

Published : Dec 18, 2019, 6:37 PM IST

நவீன இனபெருக்க உத்திகளை பயன்படுத்தி கால்நடைகளின் இனபெருக்கத் திறனை மேம்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்த சர்வதேச கருத்தரங்கம் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பாலசந்திரன் கலந்துகொண்டு கருத்தரங்கினை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர்; கடந்த 48 ஆண்டுகளாக கால்நடைகளின் இனப்பெருக்கம் குறித்த தொழில்நுட்ப உத்திகளை இந்த அமைப்பு கால்நடை வளர்ப்போருக்கும் மாணவர்களுக்கும் வழங்கி வருகிறது. இதனால், கால்நடை வளர்ப்பின் உத்திகளை இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பகிர முடிகிறது. தாய், சேய் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் ஈனியல் மற்றும் இனப்பெருக்க துறை விளங்கி வருகிறது.

துணை வேந்தர் டாக்டர் பாலசந்திரன்
துணை வேந்தர் டாக்டர் பாலசந்திரன்

வரும் 2050ஆம் ஆண்டில் பொது மக்களுக்குத் தேவையான உணவு பொருட்கள் 70 சதவீதம் கால்நடை உற்பத்தி மூலமாக கிடைக்கும் சூழ்நிலை உள்ளது, இதற்கு கால்நடைகளின் இனபெருக்கம், உற்பத்தித் திறன் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கால்நடைகளின் இனப்பெருக்கம், ஈனும் திறனை மேம்படுத்தும் வழிமுறைகளை காணவேண்டும். அவற்றின் உற்பத்திக்கு சத்தான தீவனங்கள், தாது உப்புகள் அவசியம் என்றார்.

எருமை மாடுகள் அதிகளவு சினை பருவத்திற்கு வராதிருத்தல், சினை பிடித்தலை முன்னதாகவே கண்டறிதல், மடி நோய், பிற நோய்களினால் ஏற்படும் மலட்டுத்தன்மை உள்ளிட்டவைகளையும் முன்னதாகவே கண்டறிய வேண்டும். அதேபோல், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இனபெருக்க கோளாறுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் மூலம் அழிவிலிருந்து வன விலங்குகளை காப்பாற்ற முடியும் என தெரிவித்தார்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்த நடந்த சர்வதேச கருத்தரங்கம்

இதுவரை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சென்னை, நாமக்கல், நெல்லை, ஒரத்தநாடு ஆகிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் சிகிச்சை முறைகள் குறித்து பகிரப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்திய அளவில் உள்ள பல்கலைக்கழக கல்லூரிகளிலும் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த துணை வேந்தர் டாக்டர் பாலசந்திரன்

இக்கருத்தரங்கில் கர்நாடக கால்நடை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சுரேஷ் ஹொன்னப்பாகோல், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மோகன், இந்திய கால்நடை இனவிருத்தி கழக செயலாளர் டாக்டர் சிவபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் 2ஆவது மிகபெரிய கால்நடை சந்தை தொடக்கம்!

Intro:2050-ம் ஆண்டில் பொது மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் 70 சதவீதம் கால்நடை உற்பத்தி மூலமாக கிடைக்கும் சூழ்நிலை உள்ளது - தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் கல்லூரியின் துணைவேந்தர் பேச்சுBody:நவீன இனபெருக்க உத்திகளை பயன்படுத்தி கால்நடைகளின் இனபெருக்க திறனை மேம்படுத்தி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாவது குறித்த சர்வதேச கருத்தரங்கம் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பாலசந்திரன் கலந்து கொண்டு கருத்தரங்கினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது கடந்த 48 ஆண்டுகளாக கால்நடைகளின் இனப்பெருக்கம் குறித்த தொழில்நுட்ப உத்திகளை இந்த அமைப்பு கால்நடை வளர்ப்போருக்கும், மாணவர்களுக்கும் வழங்கி வருகிறது என்றும், இதனால் கால்நடை வளர்ப்பின் உத்திகளை இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பகிரிந்து முடிகிறது, தாய், சேய் கால்நடைகளின் பாதுகாக்கும் வகையில் ஈனியல் மற்றும் இனப்பெருக்க துறை விளங்கி வருகிறது. வரும் 2050-ம் ஆண்டில் பொது மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் 70 சதவீதம் கால்நடை உற்பத்தி மூலமாக கிடைக்கும் சூழ்நிலை உள்ளது, இதற்கு கால்நடைகளின் இனபெருக்கம் மற்றும் உற்பத்தி திறன் முக்கிய பங்கு வகிக்க வேண்டும், இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் கால்நடைகளின் இனப்பெருக்கம் மற்றும் ஈனும் திறனை மேம்படுத்தும் வழிமுறைகளை காண வேண்டும், அவற்றின் உற்பத்திக்கு சத்தான தீவனங்கள், தாது உப்புகள் அவசியம் என்றார்.

தொடர்ந்து பேசுகையில் எருமை மாடுகள் அதிகளவு சினை பருவத்திற்கு வராதிருந்தல், சினை பிடித்தலை முன்னதாகவே கண்டறிதல், மடி நோய் மற்றும் பிற நோய்களினால் ஏற்படும் மலட்டுத்தன்மை உள்ளிட்டவை தற்போது கால்நடை அறிவியலாளர்கள் முன்புள்ள சவலாகும். அதே போல பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இனபெருக்க கோளாறுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும், சமீபத்திய இனபெருக்க் உத்திகளை கால்நடை மருத்துவர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கற்று கொண்டு எந்த தடையுமின்றி செயல்படுத்த வேண்டும், கால்நடை இனவிருத்தி அறிவியல் மூலம் உள்நாட்டு கால்நடை இனங்கள் மற்றும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும், அதன் மூலம் சிறந்த சந்ததிகளை உற்பத்தி செய்ய முடியும், அழிவிலிருந்து வன விலங்கு இனங்களை காப்பாற்ற முடியும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சென்னை, நாமக்கல், நெல்லை, ஒரத்தநாடு ஆகிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் சிகிச்சை முறைகள் மற்றும் முடிவுகளை இந்த பல்கலைக்கழக அளவில் மட்டுமே இதுவரை பகிர்ந்து கொண்டதாகவும், சமீபத்தில் இருந்து இந்திய அளவில் உள்ள பல்கலைக்கழக கல்லூரிகளிலும் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்தார். இக்கருத்தரங்கில் கர்நாடக கால்நடை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சுரேஷ் ஹொன்னப்பாகோல், மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மோகன், இந்திய கால்நடை இனவிருத்தி கழக செயலாளர் டாக்டர் சிவபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.