ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் பிரபு (25) மற்றும் சந்துரு (18). இவர்கள் பால் வியாபாரம் செய்து வந்தனர். இன்று (ஜன.27) காலை இருவரும் நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலத்தில் பால் சப்ளை செய்வதற்காக காரில் சென்றனர்.
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரமத்தி தொலைத்தொடர்பு அலுவலகம் அருகே கார் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சந்துரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த பிரபுவை சக வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், சந்துருவின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புளியமரத்தில் மோதி கார் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு!