ETV Bharat / state

ராசிபுரம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: மேலும் இருவர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது!

நாமக்கல்: ராசிபுரம் அருகே இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளான விவகாரத்தில், மேலும் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராசிபுரத்தில் இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை  ராசிபுரத்தில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது  Two arrested Under Goondas Act in Rasipuram  Goondas Act  Tamilnadu Child Abusement  குண்டர் சட்டம்
Two arrested Under Goondas Act in Rasipuram
author img

By

Published : Dec 11, 2020, 1:17 PM IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 13 வயது, 15 வயது சகோதரிகளான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அதேபகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் உட்பட 12 பேரை ராசிபுரம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேர், கடந்த சில நாள்களுக்கு முன்பு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சண்முகம் (வயது 45), சிவா (வயது 26) ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ், கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, இன்று(டிச.11) இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டார். மேலும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை ஆறு பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பைக் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகள் படுகாயம்: கொலை சதியா என போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.