ETV Bharat / state

நாமக்கல் அருகே கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - போக்குவரத்து துண்டிப்பு - Traffic affected due to heavy rain

நாமக்கல் அருகே ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

author img

By

Published : Nov 13, 2022, 5:15 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வரும் நிலையில், வளையப்பட்டி அருகே நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கரைபோட்டான் ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் மருதம்பட்டி, எம்.களத்தூர், செல்லும் சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு முடங்கி உள்ளது.

இதனால் மருதம்பட்டி, ஆண்டாபுரம், நாகைநல்லூர், எம். களத்தூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மேய்க்கல் நாயக்கன்பட்டி, செவிந்திபட்டி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்ல முடியாமல் பத்து கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
நாமக்கல் அருகே கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - போக்குவரத்து துண்டிப்பு

ஒரு சிலர் ஆபத்தை உணராமல் வெள்ள நீரிலும் சென்று வரும் நிலை உள்ளதால், அதிகாரிகள் தக்க தடுப்புகளை அமைத்து அசம்பாவிதச் சம்பவங்கள் ஏற்படும் முன் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்பகுதியில் உயர்மட்ட பாலம் ஒன்று அமைத்துத்தர வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ராஜபாளையம் மலைப்பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள்;போராடி மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.