நாமக்கல்: குமாரபாளையம் அம்மன் நகரைச் சேர்ந்தவர்கள் சண்முகம் - பாண்டிச்செல்வி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகன் நவீன் குமார் சித்தோட்டில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 5 மாதங்களாக தாய் தந்தைக்கு உடல் நலக்குறைவு காரணமாக கல்லூரி மாணவன் நவீன் குமார் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
கடந்த 12ஆம் தேதி தலைமை செயலகத்திற்குச் சென்று முதலமைச்சர் தனி பிரிவில் குடும்ப சூழல் காரணமாக தனியார் கல்லூரியில் படிப்பு தொடர முடியவில்லை எனவும் அரசு கல்லூரியில் இடம் வழங்க வேண்டும் எனவும் மனு கொடுத்துள்ளார். அதன் மறுதினமே கல்லூரி மாணவர் நவீன் குமாருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.
கரோனா தொற்று காரணமாக ஓய்விலுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாணவனின் மனுவை படித்து பார்த்துவிட்டு நாமக்கல் மாவட்டத்திலுள்ள அமைச்சர் மதிவேந்தன் மூலம் இந்தாண்டுக்கான கல்லூரி கட்டணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செலுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக அவர் நலம் விசாரித்துள்ளார்.
அப்போது பொருளாதார சிரம்மத்தில் உள்ள தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்த நிலையில் ஜெராக்ஸ் எடுப்பதுடன் கூடிய மளிகை கடை வைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் குடும்பத்தினர் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நவீன் குமார், தந்தைக்கு அரசு உதவி வழங்குவதற்காக குடும்பத்தினர் தகவல்களை வருவாய் துறையினர் சேகரித்தனர். மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ள படிப்பு வாய்ப்பை நல் வாய்ப்பாக பயன்படுத்துேவன் என மாணவர் நவீன் குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் கடிதம் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: சபாநாயகர் அப்பாவு