நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இரண்டு லாரிகள் மோதிக்கொண்ட விபத்து ஏற்பட்டது.
விபத்து நடந்த இடத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டிருக்கும் போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு லாரி ஆம்புலன்ஸ் மீது மோதியுள்ளது.
மூன்று லாரிகள், ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பெரியசாமி, காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ், தலைமைக் காவலர் பார்த்திபன் உள்பட மூன்று பேர் படுகாயங்களுடன் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.