நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் 50 காசுகளில் இருந்து 10 காசுகள் உயர்த்தி 3 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த 9ஆம் தேதி முட்டை ஒன்றின் கொள்முதல் விலை மூன்று ரூபாய் 30 காசுகளில் இருந்து 10 காசுகளும், 11ஆம் தேதியும் 10 காசுகளும், உயர்த்தப்பட்டு மூன்று ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜூலை13) மீண்டும் 10 காசுகள் விலை உயர்த்தி மூன்று ரூபாய் 60 காசுகளுக்கு முட்டை விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 நாள்களில் 30 காசுகள் விலை உயர்ந்தது குறித்து கோழி பண்ணையாளர்கள் கூறும் போது, "தமிழ்நாடு, கேரளாவில் முட்டை நுகர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, அதன் விற்பனையானது உயர்ந்து காணப்பட்டது. தற்போது தேவை ஏற்பட்டதன் காரணத்தினால் தான் மீண்டும் இதன் விலை உயர்ந்துள்ளது. மேலும் இவ்விலையானது சில நாள்கள் வரை நீடிக்கும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காலை 10.30 மணிக்குள் வரவேண்டும்.. ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு!