ETV Bharat / state

'தண்ணீர் எடுத்தால்...' எச்சரித்த துரை! - 'இதுதான் மக்களுக்கு செய்யும் சேவையா?' - ஓபிஎஸ்

நாமக்கல்: குடிநீர் தேவைக்காக ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்துச் சென்றால் மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என துரைமுருகன் எச்சரிக்கை விடுத்ததற்கு, இதுதான் திமுக மக்களுக்கு செய்யும் சேவையா? என அமைச்சர் தங்கமணி வேதனைபட கேள்வியெழுப்பியுள்ளார்.

தங்கமணி
author img

By

Published : Jun 23, 2019, 9:18 AM IST

Updated : Jun 24, 2019, 7:14 AM IST

தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், மாநிலம் முழுவதும் மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்படும் என சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் சிக்கல் குறித்து பேசுகையில் தெரிவித்தார்.

இதற்கு பதிலடியாக, தமிழ்நாட்டின் பிரதான பெரிய கட்சியான திமுகவின் பொருளாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன், இங்கேயே (வேலூர் மாவட்டம்) தண்ணீர் சிக்கல் இருக்கிறது. அவ்வாறு தண்ணீர் கொண்டு சென்றால் மாவட்டம் அளவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து, அமைச்சர் கே.சி. வீரமணி, வேலூர் மக்களின் தேவைக்கு அதிகமான உபரியாக இருக்கக்கூடிய தண்ணீரைத்தான் சென்னைக்கு அனுப்பஇருக்கிறார்கள். அதனால் அம்மாவட்ட மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லே என விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், துரைமுருகனின் பேச்சு பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்துகொண்டு துரைமுருகன் இப்படி பேசலாமா? இப்படி இருக்கும்போது கன்னடக்காரர்களை நாம் காவிரி தண்ணீர் தரவில்லை என்று கூறுகிறோம் என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

இதையொட்டி, கருத்து தெரிவித்த சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், தமிழ்நாட்டின் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு தண்ணீர் தர மறுத்தால் கர்நாடகம் எப்படி தண்ணீரைத் தர முன்வருமென கேள்வியெழுப்பியுள்ளார்.

துரைமுருகன் கருத்து குறித்து மின் துறை அமைச்சர் தங்கமணி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மின் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத் துறை அமைச்சர் சரோஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்துச் செல்வதை தடுப்பேன் என திமுகவைச் சேர்ந்த துரைமுருகன் கூறுவது தண்ணீரை வைத்து திமுக அரசியல் செய்வதற்கு எடுத்துகாட்டு என்றும், எதிர்ப்பு தெரிவிப்பதுதான் திமுக மக்களுக்கு செய்யும் சேவையா? என வேதனைபட கேள்வி எழுப்பினார்.

தங்கமணி

மேலும், யாகம் நடத்தினால் மழை பெய்யும் என்பது ஐதீகம் உள்ளதாகவும், அதனடிப்படையிலேயே தமிழ்நாடு முழுவதும் யாகம் நடத்துவதாகவும், இதில் பெரும் செலவு ஏதுமில்லை எனவும் தெரிவித்தார்.

செய்தி - விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, துரைமுருகன் தேவையில்லாமல் தண்ணீர் பிரச்னையை அரசியலாக்க முயல்கிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், துரைமுருகன், ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுசெல்ல தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

Intro:வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்து செல்வதை தடுப்பேன் என திமுகவை சேர்ந்த துரைமுருகன் கூறுவது தண்ணீரை வைத்து திமுக அரசியல் செய்வதற்கு எடுத்துகாட்டு என்றும், எதிர்ப்பு தெரிவிப்பது தான் திமுக மக்களுக்கு செய்யும் சேவையா ? அமைச்சர் தங்கமணிBody:நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா உள்ளிட்டோர் கலந்து கோண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவில் பேசிய அமைச்சர் தங்கமணி தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவதாகவும், இதனை பயன்படுத்தி மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்று எதிர்காலத்தில் சிறந்தவர்களாக உருவாகிட வேண்டும் எனவும், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் இதுவரை மாணவர்கலுக்கு ஒரு இலட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், இது ஏமாற்றம் அளிப்பதாகவும், வரும் கல்வி ஆண்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என பேசினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி "வேலூரில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் எடுத்து செல்வதை தடுப்பேன் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளது பற்றி கேட்ட போது பதிலளித்த அமைச்சர், வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்து செல்வதை தடுப்பேன் என திமுகவை சேர்ந்த துரைமுருகன் கூறுவது தண்ணீரை வைத்து திமுக அரசியல் செய்வதற்கு எடுத்துகாட்டு என்றும், எதிர்ப்பு தெரிவிப்பது தான் திமுக மக்களுக்கு செய்யும் சேவையா? என கேள்வி எழுப்பினார். மேலும் யாகம் நடத்தினால் மழை பெய்யும் என்பது ஐதீகம் உள்ளதாகவும், அதனடிப்படையிலே தமிழகம் முழுதும் யாகம் நடத்துவதாகவும், இதில் பெரும் செலவு ஏதுமில்லைஎனவும், தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்றும், மின் தடை மட்டுமே உள்ளதாகவும், தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி உள்ளதாகவும், 600 மெகா வாட் மின்சாரத்தை வெளிமாநிலத்திற்கு விற்பதாகவும், தமிழகத்தில் அணைகளில் தண்ணீர் இல்லாததால் அனல் மின் உற்பத்தி குறைவாக உள்ளதாகவும், இதனை ஈடு செய்ய கூடங்குளம், காற்றலை மின்சாரமும் கிடைப்பதாகவும்" தெரிவித்தார்.Conclusion:
Last Updated : Jun 24, 2019, 7:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.