ETV Bharat / state

கோயில் சிலைகள் உடைத்த ஏழுபேர் கைது - காவல்துறையினர் நடவடிக்கை

நாமக்கல்:  கோயிலில் பூஜை செய்ய அனுமதிக்காததால் விரக்தியடைந்தவர்கள்,  சாமி சிலைகளை உடைத்ததுடன் பூசாரியை கொலை செய்ய முயன்ற வழக்கில் 7 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

temple_statue_damage_issue_accused_arrested
author img

By

Published : Nov 17, 2019, 3:02 AM IST

நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டி அடுத்துள்ள புதுக்கோம்பை பகுதியில் பிரசித்திப்பெற்ற பெரியசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கருப்பனார், முனியப்பன் சாமி சிலைகளும் குதிரை வாகனமும் கடந்த 11ஆம் தேதி சேதப்படுத்தப்பட்டதோடு, கோயில் பூசாரி ரகுவின் வீடும் அடித்து நொறுக்கப்பட்டது.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சேந்தமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோயில் பூசாரியின் வீட்டிலிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

இதனையடுத்து சேந்தமங்கலம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கொல்லிமலையை சேர்ந்த பரமசிவம் என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயிலில் பூஜை செய்து வந்துள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள், பரமசிவம் பூஜை செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் பரமசிவமோ, கடந்தாண்டு முதல் இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள், கோவில் பூசாரிகள் ரகு மற்றும் அண்ணாதுரை ஆகியோரிடம் தனக்கும் பூஜை செய்ய உரிமைக்கோரித் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பூசாரி மற்றும் அவரது நண்பர்கள்

தொடர்ந்து பரமசிவத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தற்போது பூசாரிகளாக இருக்கும் ரகு, அண்ணாதுரையை பழிவாங்க பரமசிவமும் அவரது நண்பர்களான கொல்லிமலையை சேர்ந்த சிவப்பிரகாசம், பாலசுப்பரமணி, சரத்குமார், சேந்தமங்கலம் பகுதிகளை சேர்ந்த தினேஷ், தமிழரசன், கோகுல்பிரசாத் ஆகியோருடன் இணைந்து பெரியசாமி கோயிலில் உள்ள சிலைகளையும், பூசாரி ரகுவின் வீடுகள் அடித்து நொறுக்கியதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நடுக்கோம்பை பேருந்து நிறுத்தம் பகுதியில் பதுங்கியிருந்த காவல்துறையினர் கொல்லிமலையைச் சேர்ந்த பரமசிவத்தை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடைய சிவப்பிரகாசம், பாலசுப்பரமணி, சரத்குமார், சேந்தமங்கலம் பகுதிகளை சேர்ந்த தினேஷ், தமிழரசன், கோகுல்பிரசாத் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டபோது பயன்படுத்திய ரிவால்வர், நாட்டுத்துப்பாக்கிகள், தோட்டாக்களை உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட அனைவரும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கி, தோட்டாக்கள் எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

பூசாரியாக இருந்தவரே கோயில் சிலைகளை அடித்து நொறுக்கிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: VideoIn: பெண்களிடம் பூசாரி அத்துமீறிய புகார் - பணிநீக்கம் செய்த நிர்வாகம்!

Intro:நாமக்கல் அருகே கோவிலில் பூஜை செய்ய அனுமதிக்காததால் சாமி சிலைகளை உடைத்து கள்ள துப்பாக்கியுடன் கோவில் பூசாரியை கொலை செய்ய வந்த 7 பேர் கொண்ட கும்பல் கைது, Body:நாமக்கல் அருகே கோவிலில் பூஜை செய்ய அனுமதிக்காததால் சாமி சிலைகளை உடைத்து கள்ள துப்பாக்கியுடன் வந்து கோவில் பூசாரியை கொலை செய்ய வந்த 7 பேர் கொண்ட கும்பல் கைது, கள்ள துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து சேந்தமங்கலம் போலீசார் நடவடிக்கை

நாமக்கல் அடுத்துள்ள முத்துகாப்பட்டி கொல்லிமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற ஒட்டடி பெரியசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ரகு மற்றும் அண்ணாதுரை ஆகியோர் பூஜை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி நள்ளிரவில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் சிலர் வீட்டின் வெளிப்புற கதவை உடைத்து வீட்டிற்குள் புகுவதற்கு முயன்றுள்ளனர். அப்போது வீட்டில் உள்ளவர் கூச்சலிடவே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிகிறது. சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு பெரியசாமி கோவிலுக்கும் சென்று பார்த்தனர். அப்போது கோவிலில் உள்ள கருப்புனார், முனியப்பன் சாமி சிலைகளும் குதிரை வாகனம் மற்றும் விளக்குகளையும் உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது. கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் இரு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் என தெரியவந்தது.

இதனையடுத்து சேந்தமங்கலம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த கோவிலில் ரகு மற்றும் அண்ணாதுரை பூஜை செய்து வருகின்றனர். இந்நிலையில் கொல்லிமலையை சேர்ந்த பரமசிவம் என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூஜை செய்த நிலையில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் பூஜை செய்ய மறுப்பு தெரிவித்து விட்டனர். இந்நிலையில் கடந்தாண்டு முதல் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பூசாரிகள் பரமசிவம் ரகு மற்றும் அண்ணாதுரையிடம் தனக்கும் பூஜை செய்ய உரிமை கோரி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தொடர்ந்து பரமசிவத்திற்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் ரகு மற்றும் அண்ணாதுரையை பழிவாங்க பரமசிவமும் அவரது நண்பர்களான கொல்லிமலையை சேர்ந்த சிவப்பிரகாசம், பாலசுப்பரமணி, சரத்குமார், சேந்தமங்கலம் பகுதிகளை சேர்ந்த தினேஷ், தமிழரசன், கோகுல்பிரசாத் ஆகியோருடன் இணைந்து பெரியசாமி கோவிலில் உள்ள சிலைகளும் பூசாரி ரகுவின் வீடுகள் அடித்து நொறுக்கியதாக தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் நடுக்கோம்பை பேருந்து நிறுத்தம் பகுதியில் பதுங்கியிருந்த போலீசார் கொல்லிமலையை சேர்ந்த பரமசிவத்தை கைது செய்த மேற்கொண்ட விசாரணையில் வழக்கில் தொடர்புடைய சிவப்பிரகாசம், பாலசுப்பரமணி, சரத்குமார், சேந்தமங்கலம் பகுதிகளை சேர்ந்த தினேஷ், தமிழரசன், கோகுல்பிரசாத் ஆகியோரை 6 பேரையும் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட போது பயன்படுத்திய ரிவால்வர், நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை உள்ளிட்ட ஆயுதங்களை சேந்தமங்கலம் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த கள்ள துப்பாக்கி, தோட்டக்கள் எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எந்த கோவிலில் பூஜை செய்ய வேண்டும் என ஆசைபட்டரோ அந்த கோவிலின் சிலைகளை பூசாரியே அடித்து நொறுக்கியது அதிர்ச்சி அளிக்கும் செயலாக பக்தர்களால் பார்க்கப்படுகிறது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.