ETV Bharat / state

எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் வட்டாட்சியர் படுகாயம் - tahsildar injured after Jallikattu event

நாமக்கல்: எருமப்பட்டி ஜல்லிக்கட்டை முன்னின்று நடத்திய சேந்தமங்கலம் வட்டாட்சியர், போட்டி நிறைவடைந்து புறப்படும் போது எதிர்பாராத விதமாக காளை முட்டியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

tahsildar injured after Jallikattu event
காளை முட்டியதில் வட்டாட்சியர் படுகாயம்
author img

By

Published : Feb 16, 2021, 10:07 PM IST

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா எருமப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த 624 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. இந்த போட்டிகளை முன்னின்று நடத்திய சேந்தமங்கலம் வட்டாட்சியர் ஜானகி போட்டி நிறைவடைந்த பின்னர் தனது வாகனத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியில் கட்டியிருந்த காளை ஒன்று அவிழ்த்துக் கொண்டு வேகமாக வந்து அவர் இடுப்பு பகுதியில் பலமாக முட்டியுள்ளது. இதில் வட்டாட்சியர் காயமடைந்ததை அடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல்லுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இடுப்பு பகுதியில் ஆறு தையல்கள் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.‌ சம்பவம் குறித்து வருவாய்த் துறையினர், காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கூத்தைப்பார் ஜல்லிக்கட்டு வழக்கு: திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.