நாமக்கல்: பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் முன்பு அநாகரிகமாக நடந்து கொள்ளும் மாணவர்களின் காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த புதுசத்திரம் அரசுப்பள்ளியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியராகப் பன்னீர் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் 9ஆம் வகுப்பிற்கு வரலாற்றுப் பாடம் நடத்த வந்த பார்வையற்ற ஆசிரியரை மாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்து அவர் முன் நடனமாடி, அதனை செல்போனில் இன்ஸ்டா ரீல் போல் எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி அந்த ஆசிரியர் பள்ளியை விட்டு வெளியே செல்லும்போதும் மாணவர்கள் அவர்முன் அநாகரிகமாக நடந்துகொள்வதாகவும் கூறப்படுகிறது.