ETV Bharat / state

4 ரூபாய்க்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் - அசத்தும் கிராம நிர்வாகம்!

author img

By

Published : Nov 15, 2019, 11:42 PM IST

நாமக்கல்: மரூர்பட்டி ஊராட்சி நிர்வாகமும் அசோக் லேலண்ட் நிறுவனமும் இணைந்து ஜல்ஜீவன் கிராமம் என்ற திட்டத்தின் மூலமாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை நிறுவி மக்களுக்கு 4 ரூபாயில் 20 லிட்டர் குடிநீர் வழங்கிவருகிறது.

purified water at just 4 rupees

நாமக்கல் அடுத்த மரூர்பட்டி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்து அக்கிராம மக்கள் குடிநீருக்காக கடும் அவதிபட்ட நிலையில், காவிரி குடிநீரும் முறையாக கிடைக்கவில்லை. இந்நிலையில் அதிகளவு ஓட்டுநர்கள் நிறைந்த இப்பகுதிக்கு அசோக் லைலேண்ட் நிறுவனத்தின் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நிறுவனம் முன் வந்தது. அதற்காக ஜல்ஜீவன் கிராமம் என்ற திட்டத்தை தொடங்கியது. இதன் கீழ் அந்நிறுவனத்தின் சார்பில் 12 லட்ச ரூபாய் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது. அரசின் சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறும் தோண்டப்பட்டு தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டது. இதற்கான செலவினத்தை கணக்கிட்டு பொது மக்களுக்கு குறைந்த விலையில் சுத்திகரிப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் 20 லிட்டர் குடிநீர் 4 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

கிராமத்தில் உள்ள பொதுமக்கள் இங்கு குடிநீர் பெற 250 ரூபாய் வைப்பு தொகை செலுத்தி குடிநீர் அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும், அதன் பின்னர் அந்த அட்டையை ரீசார்ஜ் செய்து தானியங்கி இயந்திரத்தின் மூலம் மின்னனு அளவீட்டு படி நமது தேவைக்கேற்ப 5 லிட்டர் முதல் 60 லிட்டர் வரை தினசரி குடிநீரை பெற்று கொள்ளலாம்.

இதுகுறித்து குடிநீர் சுத்திகரிப்பு விற்பனை நிலையத்தில் பணிபுரியும் சண்முகபிரியா கூறுகையில், கடந்தாண்டு மரூர்பட்டி ஊராட்சி நிர்வாகமும் அசோக் லேலண்ட் நிறுவனமும் இணைந்து ஜல்ஜீவன் கிராமம் என்ற திட்டத்தின் மூலமாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை நிறுவி மக்களுக்கு 4 ரூபாயில் 20 லிட்டர் குடிநீர் வழங்குவதாக முடிவு செய்தன. இந்த தானியங்கு குடிநீர் இயந்திரத்தில் குடிநீர் பெற இக்கிராமத்தை சேர்ந்த 284 பேர் இணைந்துள்ளனர். அம்மக்களுக்கு குடிநீரை பெற 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடுவை இலவசமாக வழங்கப்பட்டது. மரூர்பட்டி அருகில் உள்ள கிராம மக்களும் 4 ரூபாயில் சுகாதாரமான சுத்திகரிக்கபப்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

குடிநீர் சுத்திகரிப்பு விற்பனை நிலையத்தில் பணிபுரியும் சண்முகபிரியா

ஜல்ஜீவன் கிராமம் திட்டத்தின் கீழ் பயனடையும் மரூர்பட்டி கிராமத்தை சேர்ந்த பார்வதி மற்றும் சுப்பிரமணியன் கூறுகையில், எங்களது கிராமத்தில் 20 நாட்களுக்கு ஒருமுறை காவிரி ஆற்று நீர் குழாய்களில் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த நீரும் மாசடைந்த நிலையில்தான் கிடைக்கிறது என்றனர்.

மேலும் அவர்கள், அதனை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. தற்போது எங்களது கிராமத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வெறும் 4 ரூபாயில் கிடைக்கிறது, மற்ற கிராமங்களில் உள்ளது போல் தண்ணீருக்காக குழாய் சண்டைகள் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திரத்தின் மூலம் 24 மணி நேரமும் தேவைக்கேற்ப குடிநீர் பெற்றுக்கொள்கிறோம். கடைகளில் விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விட இங்கு அதிகளவில் சுவை மிகுந்ததாக உள்ளது என தெரிவித்தனர்.

சுத்தகரிப்பு குடிநீரால் பயன்பெறும் மக்கள்

இந்த ஜல் ஜீவன் கிராமம் என்ற அசோக் லேலண்ட் நிறுவனத்தின் திட்டத்தின் தலைமை செயல்அலுவலர் லட்சுமிநாராயணன் கூறும்போது, சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீரை ரூ.4 செலுத்தி பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். மரூர்பட்டி ஊராட்சியை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்களும் குறைந்த செலவில் சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீரை பருகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இயந்திர பராமரிப்பு, வேலையாட்கள் சம்பளம் போன்ற காரணங்களுக்காகதான் இந்த தொகையும் வசூலிக்கிறோம் என்றார்.

ஜல்ஜீவன் கிராம திட்டம்

அரசே சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பேருந்து நிலையங்களில் லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் என்ற தொகையில் விற்பனை செய்யும் போது கிராம மக்களுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடை போக்கவும் அனைத்து கிராமங்களும் பொறாமைப்படும் வகையில் மரூர்பட்டி கிராம நிர்வாகமும் அசோக் லேலண்ட் நிறுவனமும் இணைந்து 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ரூ.4 க்கு வழங்குவது பாராட்டுதலுக்குரியது.

Intro:கார்டை உரசினால் போதும் 4 ரூபாய்க்கு 20 லிட்டர் அளவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அசத்தும் கிராம நிர்வாகம்

Body:நாமக்கல் அடுத்த மரூர்பட்டி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்த நிலையில் அக்கிராம மக்கள் குடிநீருக்காக கடும் அவதிபட்ட நிலையில் காவிரி குடிநீரும் முறையாக கிடைக்கவில்லை. இதனால் அக்கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் அதிகளவு ஓட்டுனர்கள் நிறைந்த இப்பகுதிக்கு அசோக் லைலேண்ட் நிறுவனத்தின் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நிறுவனம் முன் வந்ததது. அதற்காக ஜல்ஜீவன் கிராமம் என்ற திட்டத்தை தொடங்கியது. இதன் கீழ் அந்நிறுவனத்தின் சார்பில் 12 இலட்ச ரூபாய் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது. இதற்காக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறும் தோண்டப்பட்டு தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டது. இதற்கான செலவினத்தை கணக்கிட்டு பொது மக்களுக்கு குறைந்த விலையில் சுத்திகரிப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் 20 லிட்டர் குடிநீர் 4 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதற்காக குடிநீர் வழங்கும் இயந்திரத்தில் தண்ணீரின் அமிலம் மற்றும் கார தன்மையை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள பொதுமக்கள் இங்கு குடிநீர் பெற 250 ரூபாய் வைப்பு தொகை செலுத்தி குடிநீர் அட்டை பெற்று கொள்ள வேண்டும், அதன் பின்னர் அந்த அட்டையை ரீசார்ஜ் செய்து தானியங்கி இயந்திரத்தின் மூலம் மின்னனு அளவீட்டு படி நமது தேவைக்கேற்ப 5 லிட்டர் முதல் 60 லிட்டர் வரை தினசரி குடிநீரை பெற்று கொள்ளலாம். 

இதுகுறித்து குடிநீர் சுத்திகரிப்பு விற்பனை நிலையத்தில் பணிபுரியும் சண்முகபிரியா கூறுகையில் கடந்தாண்டு மரூர்பட்டி ஊராட்சி நிர்வாகமும் அசோக் லேலண்ட் நிறுவனமும் இணைந்து ஜல்ஜீவன் கிராமம் என்ற திட்டத்தின் மூலமாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டு மக்களுக்கு 4 ரூபாயில் 20 லிட்டர் குடிநீர் வழங்குவதாகவும் குடிநீரை பெற 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடுவையும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும்  இந்த தானியாங்கு குடிநீர் இயந்திரத்தில் குடிநீர் பெற இக்கிராமத்தை சேர்ந்த 284 பேர் இணைந்துள்ளதாகவும், மரூர்பட்டி அருகில் உள்ள கிராமமக்களும் 4ரூபாயில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எடுத்து செல்வதாகவும் இதன் மூலம் இக்கிராம மக்களுக்கு சுகாதாரமான சுத்திகரிக்கபப்ட குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும்  தெரிவித்தார்.

ஜல்ஜீவன் கிராமம் திட்டத்தின் கீழ் பயனடையும் மரூர்பட்டி கிராமத்தை சேர்ந்த பார்வதி மற்றும் சுப்பிரமணியன் கூறுகையில் தங்களது கிராமத்தில் 20 நாட்களுக்கு ஒருமுறை காவிரி ஆற்று நீர் குழாய்களில் விநியோகம் செய்யப்படுவதாகவும் அந்த நீரும் மாசடைந்த நிலையில் தான் கிடைக்கிறது எனவும் அதனை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் தற்போது தங்களது கிராமத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வெறும் 4 ரூபாயில் கிடைப்பதாகவும் மற்ற கிராமங்களில் உள்ளது போல் தண்ணீருக்காக குழாய் சண்டைகள் இல்லை எனவும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திரத்தின் மூலம் 24 மணி நேரமும் தேவைக்கேற்ப குடிநீர் பெற்றுக்கொள்வதாகவும் கடைகளில் விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விட இங்கு அதிகளவில் சுவை மிகுந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த ஜல் ஜீவன் கிராமம் என்ற அசோக் லேலண்ட் நிறுவனத்தின் திட்டத்தின் தலைமை செயல்அலுவலர் லட்சுமிநாராயணன் கூறும்போது  சுத்திகரிக்கப்பட்ட இந்த குடிநீரை, ஒரு குடத்திற்கு (20 லிட்டர்) ரூ.4 செலுத்தி பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். மரூர்பட்டி ஊராட்சியை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்களும் குறைந்த செலவில் சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீரை பருகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இயந்திர பராமரிப்பு, வேலையாட்கள் சம்பளம் போன்ற காரணங்களுக்காத்தான் இந்த தொகையும் வசூலிக்கிறோம். 

அரசே சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பேருந்து நிலையங்களில் லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் என்ற தொகையில் விற்பனை செய்யும் போது கிராம மக்களுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடை போக்கவும் அனைத்து கிராமங்களிலும் பொறாமைப்படும் வகையில் மரூர்பட்டி கிராம நிர்வாகமும் அசோக் லேலண்ட் நிறுவனமும் இணைந்து 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ரூ.4 க்கு வழங்குவது பாராட்டுதலுக்குறியது.

*ஈ டிவி பாரத் செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் பரத்குமார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.