நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர் கல்வி நிறுவன மாணவிகள், செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆகியோருக்கு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவலன் எஸ்ஓஎஸ் செயலி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல் துறை சார்பில் நடந்த இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் திருச்செங்கோடு டி.எஸ்.பி. சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு காவலன் எஸ்.ஓ.எஸ் செயலியை பயன்படுத்தி பெண்கள் பள்ளி, கல்லூரி மாணவிகள் முதியோர்கள் அவசர காலத்தில் எப்படி தொடர்பு கொள்வது என்பது குறித்து எடுத்துரைத்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய டி.எஸ்.பி. சண்முகம், ஹைதராபாத் சம்பவம் குறித்தும் நாட்டின் பல்வேறு சம்பவங்களை உதாரணமாக கூறிய அவர், காவலன் செயலியை பயன்படுத்தியிருந்தால் பல சம்பவங்களை தடுத்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜான்சி, நகர காவல் நிலைய துணை ஆய்வாளர் மலர்விழி, கல்லூரிகளின் பேராசியர்கள், மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க: பெருகுமா பிரம்பு பொருள் உற்பத்தி!