கரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து வருகின்றனர். நாமக்கல்லில் பேருந்து நிலையம், உழவர் சந்தை, சேலம் சாலை, பரமத்தி சாலை, மணிக்கூண்டு, மோகனூர் சாலை, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கபட்டு, கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இருப்பினும் ஓரிரு இடங்களில் மக்கள் இருச்சக்கர வாகனங்களிலும் கார்களிலும் சென்று கொண்டிருக்கின்றனர். அதனை கட்டுப்படுத்த ஆங்காங்கே காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்களிடம் கரோனா குறித்த விழிப்புணர்வை எடுத்து கூறியும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் அறிவுரை கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: முழுமையாக முடங்கிய திருப்பூர்; திறக்கப்பட்ட கடைகளுக்கு சீல்!