நாமக்கல்: 15ஆவது ஆட்சியராக ஸ்ரேயா பி சிங் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையொப்பம் இட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது, “நாமக்கல் மாவட்டமானது தமிழ்நாட்டிலுள்ள தொற்று குறையாத 11 மாவட்டங்களில் ஒரு மாவட்டமாக உள்ளது. கரோனாவல் ஒரு உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் எனது முதல் முக்கியத்துவம் இருக்கும்.
கரோனா நோய்த்தொற்றினை ஒற்றை இலக்கத்தில் கொண்டுவருவதே முதல் 3 வாரப்பணியாக இருக்கும். கரோனா காலம் என்பதால் அனைவரும் பாதுகாப்பாக இருந்து முகக் கவசம், தகுந்த இடைவேளை ஆகியவற்றை பின்பற்றி, மற்றொரு அலை வராத நோக்கில் பணியாற்ற வேண்டும்.
இரண்டு, மூன்று வாரங்களுக்காவது அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றினால் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்து இழப்புகளை தவிர்க்க முடியும்” என்றார்.
இதையும் படிங்க: கல்விச் சான்றிதழ்களைத் தரமறுக்கும் கல்லூரி நிர்வாகம்: மாணவி குடும்பத்துடன் தர்ணா