நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகேயுள்ள பிரியாணி கடை ஒன்றில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பிரியாணி கடையில் சோதனையிட்டனர். சோதனையில், ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 470 அரசு மதுபாட்டில்கள் சிக்கியது.
இதையடுத்து கடை உரிமையாளர் பத்மநாபனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரிடமிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: