நாமக்கல் அடுத்துள்ள கொண்டிச்செட்டிபட்டி பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி வேனை சோதனை செய்தனர். அதில் ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை மூன்று மூட்டைகளில் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஆம்னி வேனை ஓட்டிவந்த சென்னியப்பன் (60), அவருடன் இருந்த மணிகண்டன் (30) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.