நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த எஸ்.உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த நான்கு வருடங்களாக பள்ளி ஆசிரியராக புதன்சந்தையைச் சேர்ந்த சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி பொறுப்பாளராக இருக்கும் ஜெயந்திக்கும் திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பள்ளிவளாகத்திலேயே ஆசிரியர் சரவணனும் அங்கன்வாடி பொறுப்பாளர் ஜெயந்தியும் பள்ளி கழிவறையில் திருமணத்தை தாண்டிய உறவில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் சம்பந்தப்பட்ட இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
![school teacher attack boksho](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-03-school-teacher-attack-boksho-script-vis-7205944_17092019131651_1709f_1568706411_485.jpg)
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி மீண்டும் பள்ளியின் ஆசிரியர் சரவணனும் அங்கன்வாடி பொறுப்பாளர் ஜெயந்தியும் மண உறவைத் தாண்டிய உறவில் ஈடுபடமுயன்றதாகத் தெரிகிறது. இதனையறிந்த ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் பள்ளியில் இருந்த ஆசிரியர் சரவணன் வகுப்பறைக்குச் சென்று அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். சம்பவம் குறித்து பள்ளிக்கு வந்த கல்வி அதிகாரிகள், புதுச்சத்திரம் காவல்துறையினர் பள்ளி ஆசிரியர் சரவணனை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
![பள்ளி ஆசிரியர் சரவணன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-03-school-teacher-attack-boksho-script-vis-7205944_17092019131651_1709f_1568706411_373.jpg)
மேலும் ஆசிரியர் சரவணன் அளித்த புகாரில் ஆசிரியரை தாக்கியதாக ஊர்பொதுமக்கள் பத்து பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஆசிரியர் சரவணன் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்தாக குழந்தைகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: