நாமக்கல் எலச்சிபாளையம் அடுத்து கொத்தம்பாளையம் என்னும் கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இங்குள்ள மக்கள் கருமகவுண்டம்பாளையம், கொக்களை, பெரியமணலி, பொள்ளாச்சிபட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு திருமணிமுத்தாறு தரைப்பாலத்தை கடந்த 40ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் நீர்வரத்து அதிகமானதால் கொத்தம்பாளைத்தில் உள்ள தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி மக்கள்,பள்ளி மாணவர்கள் அபாயகரமான சூழலில் மூழ்க்கியுள்ள தரைப் பாலத்தின் வழியாக ஆற்றை கடந்து செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்," கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த தரைப்பாலம் மழைக்காலங்களில் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் மூழ்கிவிடும். இந்த தரைப்பாலத்தின் வழியாக ஆற்றைகடக்கமுடியாமல் சுமார் ஐந்து கிலோமீட்டர் சுற்றி கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.பள்ளி மாணவர்கள் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி செல்வதால் அவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.
எனவே அரசு அலுவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றித்தரவேண்டும் இல்லையென்றால் இனி வரும் தேர்தலையெல்லாம் புறக்கணிப்போம்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நீரில் முழ்கிய காந்தை ஆறு பாலம் - மலை கிராம மக்கள் பாதிப்பு