ETV Bharat / state

பேருந்து வசதி செய்து தரக் கோரி பள்ளி மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: பேருந்து வசதி செய்து தரக் கோரி பள்ளி மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

பள்ளி மாணவிகள்
author img

By

Published : Jun 25, 2019, 7:59 AM IST

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அதில், நாமக்கல் எருமப்பட்டி ஒன்றியம் ஜம்புமடை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி செய்து தரக் கோரி மனு அளித்தனர்.

பேருந்து வசதி செய்து தரக் கோரி பள்ளி மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இது குறித்து பள்ளி மாணவிகள் கூறும்போது, ‘ஜம்புடை கிராமத்திலிருந்து எருமைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி 8 கிமீ தொலைவில் உள்ளது. தினமும் காலையில் அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் செல்கிறோம். ஆனால் மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பும் நேரத்திற்கு பேருந்து இல்லாததால் பெரும் சிரமத்துக்குள்ளாகிறோம். மேலும், காலையில் ஒரே ஒரு பேருந்து மட்டுமே இருப்பதால், 12ஆம் வகுப்பு மாணவிகள் சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்’ என வேதனை தெரிவித்துள்ளனர்.

Intro:நாமக்கல் அருகே தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி செய்துதர கோரி பள்ளிமாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

Body:நாமக்கல் எருமப்பட்டி ஒன்றியம் ஜம்புமடை பகுதியை சேர்ந்த பள்ளிமாணவிகள் தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி செய்துத்தர கோரி இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

இதுகுறித்து பள்ளிமாணவிகள் பேசுகையில் தாங்கள் எருமப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பயின்று வருவதாகவும் எருமப்பட்டியிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்களது கிராமமான ஜம்புமடைக்கு தினந்தோறும் சைக்கிள் மற்றும் நடந்து செல்வதாகவும் காலை அரசு பேருந்தில் பயணம் செய்வதாகவும் மாலை பள்ளி முடிவில் வீட்டிற்கு திரும்பி செல்ல பேருந்து இல்லாததால் தங்களது கல்வியானது பாதிப்படைவதாகவும் தெரிவித்தனர்.

சைக்கிள்களில் பயணம் செய்வதால் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுஅருந்தியவர்களால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும் வேதனை தெரிவித்தனர். மாலை பள்ளி முடிவதற்கு முன்னதாகவே தங்கள் பகுதிக்கு செல்லும் கடைசி பேருந்து சென்றுவிடுவதாகவும் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருவதால் பொதுத்தேர்வு காரணமாக சிறப்புவகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்படாவதால் அதற்கும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தனர். அதன்காரணமாக மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு தங்களது கிராமத்திற்கு பேருந்து வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.