நாமக்கல்: திருச்செங்கோடு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் நேற்று (மார்ச் 12) வழக்கம் போல் காலை பள்ளிக்கு சென்றவர், மதியம் 2.30 மணியளவில் வாந்தி வருவதாகக் கூறி வகுப்பறையில் இருந்து வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற அவர், யாரும் எதிர்பாராத விதமாக பள்ளி வளாகக் கட்டடத்தின் இரண்டாவது மாடிக்குச் சென்று கீழே குதித்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், சக மாணவிகள் படுகாயமடைந்த மாணவியை மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் ஆசிரியை திட்டியதால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கல்வியும் - சுகாதாரமும் அரசின் இரு கண்கள்' - மாநாட்டில் முதலமைச்சர் உரை