நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புவரை உள்ளது. இப்பள்ளியில், 13 மாணவர்களும் 24 மாணவிகளும் என மொத்தம் 37 பேர் பயின்றுவருகின்றனர்.
நேற்று இரவு பெய்த கனமழையினால் பள்ளி வளாகம், வகுப்புகளில் மழைநீர் புகுந்தது. இதனால் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் வகுப்பறைக்கு மழைநீரில் நடந்து சென்றனர். அதோடு வகுப்பறை, சத்துணவு சமையல் கூடம், தலைமை ஆசிரியர் அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்பதால் மாணவர்களும் ஆசிரியர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
பின்னர், பள்ளி வளாகத்தின் நிலைமையை அறிந்த வட்டார கல்வி அலுவலர் செல்வி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாலுசாமி பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு மதியம் பள்ளிக்கு விடுமுறை அறிவித்தனர்.
இதையும் படிங்க: இடியால் நீர் ஊற்று - நாமக்கல் மாவட்டத்தில் அதிசயம்!