ETV Bharat / state

அரசு பணிக்கு என்று மணல் எடுத்து தனியாருக்கு விற்பனை -மணல் லாரி உரிமையாளர்கள் மனு! - Sand sales issue

நாமக்கல்: மணல் குவாரிகளில் அரசு பணிக்கு என்று மணல் எடுத்து தனியாருக்கு மணல் விற்பனை செய்வதை தடுக்க கோரி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அரசு பணிக்கு என்று மணல் எடுத்து தனியாருக்கு விற்பனை -மணல் லாரி உரிமையாளர்கள் மனு!

author img

By

Published : Feb 14, 2020, 12:45 PM IST

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல. ராசாமணி தலைமையில் மணல் லாரி உரிமையாளர்கள் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் புகார் மனு ஒன்று அளிக்க வந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் இல்லாததால் அவரின் நேர்முக உதவியாளர் பால் பிரின்ஸ் ராஜ்குமாரிடம் அளித்தனர்.

பின்னர் பேசிய செல்ல.ராசாமணி, ”தமிழ்நாடு முழுவதும் நாமக்கல் மாவட்டம் ஆரியூர், புதுக்கோட்டை மாவட்டம் கோவில்வயல், வேலூர் மாவட்டம் வடுகங்தாங்கல், தஞ்சாவூர் மாவட்டம் நீர்த்தநல்லூர் ஆகிய ஐந்து அரசு மணல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. இதன் மூலம் அரசு கட்டுமான பணிகளுக்கு 600 முதல் 700 லோடு மணல் வழங்கப்பட்டுவருகிறது. இவை அரசு ஒப்பந்த பணிக்கு பயன்படுத்தாமல் தனியாருக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதனால் இதனை தடுக்க வேண்டும். அனைத்து நாட்களிலும் ஆன்லைன் மூலம் தனியார் லாரிகளும் மணல் முன்பதிவு செய்திட வேண்டும்.

அரசு பணிக்கு என்று மணல் எடுத்து தனியாருக்கு விற்பனை -மணல் லாரி உரிமையாளர்கள் மனு!

அரசின் கட்டுமான பணிகளுக்கும் எம்.சாண்ட் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் ஆரியூர் மணல் விற்பனை நிலையத்தில் மணல் விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க மனு அளித்துள்ளோம். இதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்” என்றார்.

இதையும் படிங்க...மக்கள் பயன்படுத்தும் எரிபொருளுக்கு இவ்வளவு விலையேற்றமா? கே.எஸ். அழகிரி கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.