நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் கிராமத்தில் அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர், சில பகுதிகளை தவிர்த்திருக்கின்றனர் போலும். இதனால் ஆத்திரமடைந்த பணம் வாங்காத பகுதியைச் சேர்ந்த சிலர், தங்களுக்கும் பணம் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படையினர், காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது காவல் துறையினர் வருவதைக் கண்ட சாலை மறியலில் ஈடுபட்டோர் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். இருப்பினும் அகப்பட்ட ஐவரை மட்டும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. ஆனால், சற்றும் யோசிக்காமல் மிட்டாய் கடையை கண்டு அடம்பிடிக்கும் சிறு குழந்தை போல, ஒட்டுக்கு பணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : பறவையே எங்கிருக்கிறாய்.. பறக்கவே உன்னை அழைக்கிறோம்..!