நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியிலுள்ள பல்வேறு பகுதிகளில் சாலை குண்டும் குழியுமாக காட்சியாளிக்கிறது. தினமும் பல ஆயிரம் வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் இந்த முக்கிய சாலை முழுவதும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
மேலும் இந்த சாலையில் வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும், இப்பகுதிக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
எனவே இதனைக் கண்டித்து பழைய பேருந்து நிலையம் முன்பு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்தி செல்வன் மற்றும் நகரச் செயலாளர் சங்கர் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு காலி குடங்களுடன் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'பள்ளிகளில் மாணவர்கள் குடிநீர் அருந்த 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும்' - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு!