இது குறித்து வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், 'ராசிபுரம் சாலையில் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்காக ரூ.52 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு குழிகள் தோண்டப்பட்டன. அதற்கிடையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கிடைப்பில் போடப்பட்டது.
அதனால் சாலையில் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். ஒரே சமயத்தில் ராசிபுரத்தில் உள்ள அனைத்து பிரதான சாலைகளிலும் இது போன்று பாதாளச் சாக்கடை திட்டத்திற்கு குழிகள் வெட்டப்பட்டுள்ளன. இதனால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.