ETV Bharat / state

ஏற்றம் கண்ட பருத்தி விலை; ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம்!

நாமக்கல்: வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க பருத்தி ஏலத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு 4,200 பருத்தி‌ மூட்டைகள் ஏலம் எடுக்கப்பட்டன.

Rising cotton prices; Auction for one crore rupees in one day!

author img

By

Published : Jan 20, 2021, 8:22 AM IST

நாமக்கல்லில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை அன்று பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று (ஜன.19) நடைபெற்ற ஏலத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், துறையூர் முசிறி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பருத்தி முட்டைகளை விற்பனை கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டாலுக்கு ரூ.5,500 முதல் ரூ.7,667 வரையிலும், சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ.6,209 முதல் ரூ.8,119 வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த ஏலத்தில் 4,200 பருத்தி மூட்டைகள் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

ஏற்றம் கண்ட பருத்தி விலை; ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம்

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "கடந்த வாரங்களை விட இந்த வாரம் பருத்தியின் விலை அதிகரித்துள்ளது. இருப்பினும் பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்பட்ட தொகையை அலுவலர்கள் உடனடியாக விவசாயிகளுக்கு வழங்குவதில்லை. ஒன்று, இரண்டு நாட்களுக்கு பிறகு தான் விவசாயிகளுக்கு ஏலத்தொகை வழங்குகின்றனர் என குற்றஞ்சாட்டினர்.

இதையும் படிங்க: ரூ. 12 கோடி கிறிஸ்துமஸ் பம்பர் பரிசு வென்ற லாட்டரி வியாபாரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.