நாமக்கல்:
நாமக்கல்லில் நடைபெற்ற 71ஆவது குடியரசு தினவிழா விழாவில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து 375 பயனாளிகளுக்கு ரூ.1.88 கோடி மதிப்புள்ள நலத் திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அரசு துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.
அரியலூர்:
அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 71ஆவது குடியரசு நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ரத்னா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். மேலும், 50 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 19 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 1 கோடியே 21 லட்சத்து 46 ஆயிரத்து 275 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்ட விளையட்டு அரங்கில் 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தேசிய கொடியேற்றி வைத்தார். மேலும் காவல்துறை, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை திறந்த வாகனத்தில் சென்று ஏற்றுக் கொண்டார். குடியரசு தினத்தையொட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு வகையான கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து சமாதானத்தைக் குறிக்கும் வகையில் புறாக்கள் பறக்க விடப்பட்டன. பின்னர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவரது வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
இதையும் படிங்க: மதிநுட்பத்தால் வெற்றிகண்ட திருவிதாங்கூர் படைகள்!