ETV Bharat / state

கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு - மீறுபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை! - காவல்துறை எச்சரிக்கை

நாமக்கல்: கரோனா பரவலை கட்டுபடுத்தும் விதமாக, காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், சிறு கடைகளும் மாலை 5 மணிக்கு மூடப்பட்டது.

Reduction of running time of stores; Police alert for violators

author img

By

Published : Jun 24, 2020, 5:01 AM IST

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் திறக்கும் நேரத்தினை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வணிகர் சங்க ஆலோசனை கூட்டத்தில், இன்று முதல் வணிக நிறுவனங்களும், கடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நாமக்கல் நகரின் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையம், கடைவீதி,சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணிக்கு 90 சதவீத கடைகள் மூடப்பட்ட நிலையில், ஒரு சிலர் கடைகளை திறந்து வைத்திருந்தனர்.

மேலும், மாலை 5 மணிக்கு மேல் திறக்கப்பட்டிருந்த ஒருசில வணிக நிறுவனங்கள் மற்றும் மளிகை கடைகளின் பகுதிகளுக்கு ரோந்து சென்ற மாவட்ட காவல் துறையினர், கடை உரிமையாளர்களை எச்சரித்து கடைகளை உடனடியாக மூடும் படி அறிவுறுத்தினர்.

இதன் காரணமாக இரவு 7 மணிக்கு முன்பாகவே நகரின் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகள் அனைத்தும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.