ETV Bharat / state

வெள்ளக்காடான ராசிபுரம் - அமைச்சர்கள் வராததால் மக்கள் வேதனை! - தமிழ்நாடு முழுவதும் பெய்து வரும் பருவ மழை

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

Etv Bharatவெள்ளகாடான ராசிபுரம் - அமைச்சர்கள் வராததால் மக்கள் வேதனை

author img

By

Published : Nov 15, 2022, 5:31 PM IST

Updated : Nov 15, 2022, 7:22 PM IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் கடந்த சில தினங்களாகவே மிதமான மழையும் கனமழையும் பெய்தது. இந்த நிலையில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சோளம், பருத்தி, நெல் உள்ளிட்டப்பயிர்கள் மூழ்கியதால் மழை நீர் இன்னும் வெளியேறாத நிலையில் காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்ந்து இடைவிடாது பெய்து வந்த மழையால் ராசிபுரத்தைச் சுற்றியுள்ள அணைப்பாளையம் ஏரி, தட்டான் குட்டை ஏரி, ராசிபுரம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துக்கொண்டு வருகிறது. நீர் வரத்து அதிகரிப்பால் ஏரி கடல் போல் காட்சியளிக்கிறது. ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால் 2000க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள், வெள்ள நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் சந்திரசேகரபுரம் குடியிருப்புப்பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் நீரில் மூழ்கியதால் தற்போது தங்க இடமில்லாமல் தவித்து வருவதாகவும்; உணவுக்கு வழியில்லாததால் அக்கம்பக்கத்தினர் கொடுக்கும் உணவை உண்பதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

வெள்ளகாடான ராசிபுரம்
வெள்ளக்காடான ராசிபுரம் - அமைச்சர்கள் வராததால் மக்கள் வேதனை!

தற்போது மழை விட்ட பின்பும் இதுவரை அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவோ ஆறுதல் சொல்லவோகூட இதுவரை யாரும் எட்டிகூட பார்க்கவில்லை என குடியிருப்புவாசிகள் மற்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட குடியிருப்பு வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை அதிகாரிகள் பார்வையிட்டு, நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு...? சென்னையில் 4 இடங்களில் சோதனை...

Last Updated : Nov 15, 2022, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.