நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் . அதே போல், இந்த ஆண்டும் கடந்த 22ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியதைத் தொடர்ந்து தினமும் காலை முதல் மாலை வரை 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
அப்போது பூசாரி ராமலிங்கம் திருவிழாவுக்கு வரும் இளம்பெண்களை மயிலிறகால் வருடுவது போன்ற காணொலி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.
இது தொடர்பாக வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் கோயில் நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்த நிலையில், பூசாரி ராமலிங்கத்தைக் கோயில் நிர்வாகம் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மெய்கண்டார் கோயில் குருபூஜை வழிபாடு: பக்தர்கள் தரிசனம்