நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலை பகுதியைச் சேர்ந்த அவினாசி என்பவரின் மகன் சுதாகர் (36). பார்மஸி படிப்பு முடித்துள்ள இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. ஆனால் குடும்ப பிரச்னை காரணமாக இவரது மனைவி, பெண் குழந்தையுடன் கோவையில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இச்சூழலில், தனது தாய் அம்சவேணியுடன் வசித்துவந்த சுதாகர் மனம்நலம் பாதித்திருந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். நேற்று மாலை வீட்டை விட்டுச் சென்ற இவர், கோனேரிப்பட்டி பகுதியிலுள்ள சிவக்குமார் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சசி தரூர் எழுதிய புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருது!
சுதாகர் கிணற்றில் விழுந்துகிடப்பதைக் கண்ட தோட்ட தொழிலாளர்கள் இது குறித்து காவல் துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் விரைந்துவந்த தீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் கிணற்றை சுற்றி மின்விளக்குகள் அமைத்து, நீரில் மூழ்கும் படக்கருவியைப் பயன்படுத்தி சுதாகரின் உடலைத் தேடினர்.
இரண்டு மணி நேர தேடுதலுக்குப் பின்னர் கயிற்றைக் கட்டி அவரது சடலத்தை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பின்னர், சடலத்தை மீட்ட காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.