டிசம்பர் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை 5 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் காண வரும் பக்தர்களுக்கு ஜனகல்யாண் சார்பில் 29 ஆம் ஆண்டாக லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படவுள்ளது. இதற்காக 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி இன்று தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியது.
இதற்காக 1000 கிலோ கடலை மாவு, 1000 கிலோ சர்க்கரை, 100 கிலோ நெய், 1000 லிட்டர் கடலெண்ணெய், 25 கிலோ முந்திரி, 25 கிலோ திராட்சை, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் உள்ளிட்டவை 5 கிலோ ஆகிய பொருள்களை கொண்டு லட்டு தயாரிக்கும் பணியில் 15 தொழிலாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
2 நாள்களில் லட்டு தயாரிக்கும் பணி முழுமையாக நிறைவடையும் எனக் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
காவல் ஆய்வாளர் அடித்து ஆட்டோ ஒட்டுநர் மரணம்! ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு