ETV Bharat / state

தற்கொலை செய்துகொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியா தந்தையிடம் 2 மணி நேரம் விசாரணை!

நாமக்கல்: டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகப் புகாரளித்த, அவரது தந்தையிடம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

police investicated DSP Vishnupriya father

author img

By

Published : Mar 10, 2020, 11:24 PM IST

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பெண் டிஎஸ்பியாக இருந்தவர், விஷ்ணுபிரியா. இவர், பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அலுவலராகச் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி, தனது முகாம் அலுவலகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களாகக் கருதப்பட்ட விஷ்ணுபிரியா பயன்படுத்தி வந்த டேப், செல்போன், வீடியோ கேமரா உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களில் இருந்த தகவல்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாகக் கூறி, காவலர்கள் முத்துக்குமார், ரவிக்குமார், டிஎஸ்பிக்கள் ராஜு, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி ஆன்லைன் மூலமாக நாமக்கல் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புப் பிரிவிடம் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார்.

புகாரின் பேரில் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியை நேரில் ஆஜராக மாவட்டக் காவல் துறையினர் கேட்டுக்கொண்டிருந்தனர். இதன் பேரில் இன்று ஆஜரான ரவியிடம், ஏடிஎஸ்பி ரவிக்குமார் 2 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினார்.

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தந்தை பேட்டி

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி, 'விசாரணையின்போது தன்னிடம் 23 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், விசாரணை திருப்திகரமாக இருந்ததாகவும்' கூறினார். மேலும் அவர் தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் அமைச்சுப் பணி கண்காணிப்பாளர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.