ETV Bharat / state

மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 நாட்டுத் துப்பாக்கிகள் கண்டெடுப்பு - நாட்டுத் துப்பாக்கிகளை கைப்பற்றிய போலீசார்

நாமக்கல்: கொல்லிமலை அருகே மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உரிமம் இல்லாத 35 நாட்டுத் துப்பாக்கிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

unlicensed country guns, நாட்டுத் துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு
unlicensed country guns
author img

By

Published : Dec 6, 2019, 7:36 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்போர், தங்கள் வசம் உள்ள கள்ளத்துப்பாக்கிகளை ரகசிய இடத்தில் வைத்துவிட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட தனிப்பிரிவிற்கோ தகவல் தெரிவிக்குமாறு கடந்த 2ஆம் தேதியன்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே கொல்லிமலை அருகேயுள்ள மயானத்தில் துப்பாக்கிகள் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் சேந்தமங்கலம் வட்ட காவல் ஆய்வாளர் தீபா தலைமையிலான தனிப்படையினர் கொல்லிமலை அரியூர்நாடு அடுத்துள்ள அரியூர், சோளக்காடு ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த மயானங்களின் அருகேயுள்ள முட்புதரில் 35 எண்ணிக்கைகளிலான SBML ரக நாட்டுத் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 நாட்டுத் துப்பாக்கிகள் கண்டெடுப்பு

இதைத்தொடர்ந்து அவற்றை கைப்பற்றிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே இடத்தில் 35 உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் கிடைத்தது அப்பகுதி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதுபோன்று அறியாமையின் காரணமாக எவரேனும் கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தால் அவற்றை ரகசிய இடத்தில் வைத்துவிட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது 9498101020, 04286-280500 ஆகிய எண்களிலோ “Namkaval” (நம்காவல்) என்ற கைபேசி செயலியிலோ (Mobile App) மாவட்ட தனிப்பிரிவிற்கோ தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவிட்டுள்ளார்.

Intro:கொல்லிமலை மயானத்தில் மறைத்து வைத்திருந்த 35 உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல், வாழவந்தி போலீசார் நடவடிக்கைBody:நாமக்கல் மாவட்டத்தில் அறியாமையின் காரணமாக கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்போர் தங்கள் வசம் உள்ள கள்ளத்துப்பாக்கியை இரகசிய இடத்தில் வைத்துவிட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட தனிப்பிரிவிற்கோ தகவல் தெரிவிக்குமாறு கடந்த 02.12.2019 நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று  சேந்தமங்கலம் வட்ட காவல் ஆய்வாளர் தீபா தலைமையிலான தனிப்படையினர் கொல்லிமலையில் அரியூர்நாடு அடுத்துள்ள  அரியூர் மற்றும் சோளக்காடு ஆகிய பகுதிகளில் மயானத்தின் அருகில் உள்ள முட்புதரில் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த SBML ரக 35 நாட்டு துப்பாக்கிகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே இடத்தில் 35 உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் கிடைத்தது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதேபோல் அறியாமையின் காரணமாக எவரேனும் கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தால் தங்கள் வசம் உள்ள கள்ளத்துப்பாக்கியை இரகசிய இடத்தில் வைத்துவிட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது 9498101020, 04286-280500 ஆகிய எண்களிலோ “Namkaval” (நம்காவல்) என்ற கைபேசி செயலியிலோ (Mobile App) மாவட்ட தனிப்பிரிவிற்கோ தகவல் தெரிவிக்குமாறு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவிட்டுள்ளார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.