நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜீவா. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு வயதில் மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த ஜீவா என்ற 17 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண், சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஜீவாவை கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், நேற்று (பிப். 19) தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், இளம்பெண்ணை பாலியல் கொடுமை செய்த ஜீவாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, குற்றவாளியை கோவை மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.
இதையும் பார்க்க : குடிக்க பணம் தராத மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த கணவன்!