நாமக்கல் மாவட்டம் சத்தியநாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள ஏரியானது தற்போது வறண்டு தண்ணீர் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் சிலர் ரசாயன கழிவுகளையும் குப்பை கழிவுகளையும் இந்த ஏரியில் கொண்டு வந்து கொட்டி வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் இந்த பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீ வைத்துவிட்டனர். இதனால் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து புகை ஏற்பட்டு ஊருக்குள் பரவத் தொடங்கி உள்ளது. முதலில் பனிமூட்டம் என்று கருதிய பொதுமக்கள் புகையின் தாக்கத்தால் மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல், இருமல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகினர்.
மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் தீ பிடித்து எரிவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும், ஏரியில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: