கரோனா காலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று(டிச.23) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கலந்து கொண்டு கரோனா தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர், ஆய்வகப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 500க்கும் மேற்பட்டோரை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது பேசிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர், "இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு லாரிகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. இவற்றில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளுக்குச் சென்று வந்த நிலையில், கரோனா காலத்தில் அவர்களைக் கண்டறிந்து நோய்த் தொற்றுப் பரவாமல் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து சிறப்பாகப் பணியாற்றி மாவட்டத்தில் நோய்த் தொற்றைக் கட்டுக்குள் வைத்துள்ளனர். பொதுமக்கள் நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று குறைவாக உள்ளது என அலட்சியம் காட்டாமல் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' எனவும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: 'தபாலில் வாக்களிப்பு எனும் அறிவிப்பே பிராடுத்தனமானது' - துரைமுருகன்