ETV Bharat / state

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சின்ராஜ் தேர்வு - சின்ராசு

நாமக்கல்: நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி. சின்ராஜ் என்பவர் போட்டியிடுகிறார்.

சின்ராசு
author img

By

Published : Mar 18, 2019, 11:23 PM IST

வேட்பாளர் பற்றிய விவரம் பின்வருமாறு, நாமக்கல் மாவட்டம், அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ். விவசாயியான இவர் கோழி பண்ணை, நகைக்கடை வியாபாரம் செய்து வருகிறார். பெற்றோர் பழனியப்பன்-செட்டி அம்மாள். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், சுகன், சுஜிதா என்ற இருப்பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியில் உள்ளார்.

இவர் கொங்கு முன்னேற்ற கழகத்தில் இருந்தபொழுது 1996 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரத்தில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் தமயந்தியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில நிதிக் குழு தலைவராக உள்ளார். இந்த நிலையில் திமுகவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் தொகுதியில் வேட்பாளராக சின்ராஜை அறிவித்துள்ளது. இதை ஈரோட்டில் நடந்த ஆட்சி மன்ற குழுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவித்தார்.

நாமக்கல் 

பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஏ கே பி சின்ராசு என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவருடைய  சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அடுத்துள்ள அத்தனூர்.

 தொழில் ; விவசாயம், கோழி பண்ணை, நகை கடை வியாபாரம்.

 தாயார் பெயர் ; செட்டி அம்மாள் 

தந்தை பெயர் ; பழனியப்பன் 

இவரது மனைவி ; சாந்தி,

 இவர்களுக்கு சுகன் என்ற மகனும் சுஜிதா என்ற மகளும் உள்ளனர்.

 15 ஆண்டுகளாக இவர் கட்சியில் உள்ளார்.

 இவர் கொங்கு முன்னேற்ற கழகத்தில் இருந்தபொழுது ராசிபுரத்தில் 1996 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் தமயந்தியிடம் 22 ஆயிரம் ஓட்டுகள்  பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில நிதிக் குழு தலைவராக தற்போது உள்ளார்.

 ஏற்கனவே மாநில பொருளாளராக பணியாற்றினார்.

 இவர் இப்போது தமிழ்நாடு கோழிபண்ணையாளர் சங்கத்தின் உடைய தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

அண்மையில் நாமக்கல்லில் நடந்த உலக கொங்கு இரண்டாம் மாநாடு மாநாட்டு குழு பொறுப்பை ஏற்று நடத்தி லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை ஒருங்கிணைத்த  பெருமை இவரை சாரும்.

 இந்த நிலையில் திமுகவின் கூட்டணியில்  பாராளுமன்ற தொகுதிக்கு  கொமதேக வின் பலருடைய பெயர் பரிந்துரைத்த பட்ட போதும் இவர் இன்று அதிகாரப்பூர்வமாக   அக்கட்சி வேட்பாளராக சின்ராசை அறிவித்தது.

ஈரோட்டில் நடந்த ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்  நாமக்கல் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினுடைய பாராளுமன்ற  வேட்பாளராக சின்ராசை அறிவித்து முடிவு செய்துள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.