ETV Bharat / state

மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்- மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்

நாமக்கல்: மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக மக்கள் நீதி மய்ய கட்சி சார்பில் நாமக்கலில் போட்டியிடும் வேட்பாளர் தங்கவேல் கூறியுள்ளார்.

தங்கவேல்
author img

By

Published : Apr 7, 2019, 11:51 PM IST

நாமக்கல் நாடாளுமன்றத்தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் தங்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாமக்கல் சட்டமன்ற தொகுதிகளான திருச்செங்கோடு, ராசிபுரம், சங்ககிரி, மல்லசமுத்திரம், தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் இதுவரை பரப்புரை மேற்கொண்ட போது மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் மிகப்பெரிய கோபத்தில் உள்ளது தெரிந்தது.

செய்தியாளர்களை சந்தித்த தங்கவேல்

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் எனக்கு நல்ல ஆதரவு உள்ளது. இந்த தேர்தலில் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். மத்திய அரசின் ஜிஎஸ்டியால் பல்வேறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியை குறைக்க அழுத்தம் கொடுப்பேன். சங்ககிரி லாரி பாடி கட்டும் தொழிலுக்கு உயர்த்தப்பட்டுள்ள வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். கொசவம்பட்டி குப்பைக்கிடங்கில் குப்பைகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் தண்ணீர் மாசுபடுகிறது. இவற்றை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்தார்.

Intro: தேர்தலில் மக்களிடம் வாக்களிக்க பணம் கொடுத்து அடிமையாக்க மாட்டோம் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் தங்கவேல் பேட்டி

Body:நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்கவேல் நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் நாமக்கல் சட்டமன்ற தொகுதிகளான திருச்செங்கோடு,ராசிபுரம் சங்ககிரி,மல்லசமுத்திரம்,தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் இதுவரை பிரச்சாரம் மேற்கொண்டுள்ளேன். அங்கு பிரச்சாரம் செய்யும்போது மத்திய மாநில அரசின் மீது மக்கள் மிகப்பெரிய கோபத்தை உள்ளன என்பதை என்னிடம் நேரடியாகவே கூறியுள்ளனர். ஆகவே மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் எனக்கு நல்ல ஆதரவு மக்களிடையே உள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாமக்கல் மக்களுக்கு பல்வேறு தேவைகள் உள்ளது.மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியினால் பல்வேறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அழுத்தம் கொடுப்பதாகவும், சங்ககிரி லாரி பாடி கட்டும் தொழில் உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தார். மேலும் கொசவம்பட்டி குப்பை கிடங்கில் குப்பைகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் தண்ணீர் மாசுபடுகிறது. இவற்றை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாமக்கல் மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆளும் மாநில அரசு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார். மக்கள் தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்க தயாராக இல்லை. வாக்குகளிக்க மக்களுக்கு பெரிய கட்சிகள் பணத்தை கொடுத்து வெற்றி பெறலாம் என நினைத்துக்கொண்டுள்ளனர். அது ஒருபோதும் நடக்காது.எனவே மக்கள் இந்த தேர்தலில் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டுமென்பது பிரதான முழக்கமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

Conclusion:இந்த செய்தியாளர் சந்திப்பின் போது நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மணி, நாமக்கல் மத்திய மாவட்ட பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் உடனிருந்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.