நாமக்கல் மாவட்டத்தில் சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் ஏசியன் டெக்ஸ் என்ற தனியார் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு ஆலைக்கு நாமக்கல் மாவட்டத்திலிருந்து பணிக்குச் சென்ற பலருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால் கரூருக்கு பணிக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 31) காலை நாமக்கல்-கரூர் மாவட்டங்களை இணைக்கும் பரமத்திவேலூரை அடுத்துள்ள காவிரி ஆற்றின் பாலத்தில் மாவட்ட வருவாய்த்துறையினர், காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பரமத்திவேலூரில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு அதிகளவில் ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற கரூரில் செயல்பட்டுவரும் தனியார் நூற்பாலைக்குச் சொந்தமான வாகனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் அந்த வாகனம் அனுமதியின்றி இ-பாஸ் இல்லாமல் பரமத்திவேலூரிலிருந்து கரூருக்குச் சென்றதும் அதிகளவில் ஆட்களை ஏற்றிச் சென்றதும் தெரியவந்தது. இதன் காரணமாக வாகனத்தைப் பறிமுதல் செய்து ஆட்களை இறக்கிவிட்ட வருவாய்த் துறையினர் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
கரோனா தடுப்பு விதிமுறை மீறல்: வாகனத்தைப் பறிமுதல் செய்து அலுவலர்கள் அதிரடி - கரோனா தடுப்பு விதிமுறை மீறல்
நாமக்கல்: கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி கரூர் தனியார் ஆயத்த ஆடை ஆலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனத்தைப் பறிமுதல் செய்து வருவாய்த் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
![கரோனா தடுப்பு விதிமுறை மீறல்: வாகனத்தைப் பறிமுதல் செய்து அலுவலர்கள் அதிரடி வாகனம் பறிமுதல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:01:23:1596180683-tn-nmk-01-paramathivelur-bus-seized-script-vis-7205944-31072020124516-3107f-1596179716-963.jpg?imwidth=3840)