நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்தவர் தினேஷ். கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனத்தை பரமத்திவேலூரில் வைத்து இயக்கி வந்துள்ளார். நேற்று நள்ளிரவு கொந்தளம் அருகே சாலை விபத்து நடந்துள்ளதாகவும்; விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச்செல்ல வேண்டும் எனத் தகவல் வந்துள்ளது. இதனையடுத்து தினேஷ் ஆம்புலன்ஸை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுள்ளார்.
அப்போது கோப்பன்னம்பாளையம் அருகே ஒரு வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே வந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ் மோதியுள்ளது. இதில் ஆம்புலன்ஸ் சுக்குநூறாக நொறுங்கியதில் டிரைவர் தினேஷ் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த பரமத்திவேலூர் காவல்துறையினர் தினேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: