ETV Bharat / state

புதிய மோட்டார் வாகன சட்டம்: லாரி கூண்டு கட்டும் தொழிலில் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம்! - லாரி கூண்டுக் கட்டும் தொழில் நாமக்கல்

நாமக்கல்: புதிய மோட்டார் வாகன சட்டத்தால் நாமக்கலைச் சுற்றி இயங்கிவரும் லாரி கூண்டு கட்டும் தொழில் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு, பல லட்சம் பேர் வேலையிழக்கும் சூழல் ஏற்படும் என அத்தொழில் நிறுவனத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

Namakkal lorry body builders
author img

By

Published : Oct 5, 2019, 3:15 AM IST

Updated : Oct 5, 2019, 6:59 AM IST

நாமக்கல் என்றாலே லாரித் தொழிலும், கோழிப்பண்ணைத் தொழிலும்தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலாக உள்ள, புதிய மோட்டார் வாகன சட்டத்தால் நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட லாரி கூண்டு கட்டும் தொழில் (லாரி பாடி பில்டர்ஸ் தொழில்) நிறுவனங்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தால் தொழில் நசுங்கும் என தொழிலாளர்கள் வருத்தம்

சர்வதேச தரத்திற்கு லாரி கூண்டு கட்டும் தொழிலை எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் புதிய மோட்டார் வாகன சட்டத்தைக் கொண்டு வரப்போவதாக மத்திய அரசு கூறுகிறது. இத்தொழிலில் தற்போது ஈடுபட்டுள்ளவர்கள் சுமார் 20 முதல் 30 ஆண்டுகள் அனுபவ அடிப்படையிலேயே இத்தொழிலைச் செய்துவருகின்றனர்.

ஆனால் இந்தப் புதிய மோட்டார் வாகன சட்டமானது கூண்டு கட்டும் தொழிலில் ஈடுபடுபவர்கள் சொந்தமாக 12 ஆயிரம் சதுர அடிகள் நிலம் குத்தகை அடிப்படையில் வைத்திருக்க வேண்டும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.) கட்டாயம் படித்திருக்க வேண்டும், ஏ.ஆர்.ஏ.ஐ (ARAI) தரச் சான்று பெற்றிருக்க வேண்டும் எனப் பல்வேறு விதிமுறைகளையும் வகுத்துள்ளது. இதுபோன்ற கட்டுப்பாடுகளால் கூண்டு கட்டும் தொழில் நசுக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு இத்தொழில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக இத்தொழில் செய்பவர்கள் கூறுகின்றனர்.

முன்பெல்லாம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் இங்கு வந்து லாரிகளுக்குக் கூண்டு கட்டிச் சென்றனர். ஆனால் டோல் கட்டணம், ஜிஎஸ்டி வரி உயர்வு போன்றவற்றால் வெளியூர் லாரிகள் தற்போது கூண்டு கட்டும் பணிக்கு பெரும்பாலும் வருவதில்லை. இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்தப் புதிய மோட்டார் வாகன சட்டம் உள்ளூர் லாரி கூண்டு கட்டும் தொழிலை நசுக்கி, பெரு நிறுவனங்களுக்குத் துணைபுரிவது போல் உள்ளதாக தொழிலில் ஈடுபடுபவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

அரசின் எவ்வித உதவியுமின்றி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சிறு தொழிலாக லாரிகளுக்கு கூண்டு கட்டும் பணியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும், புதியதாக அரசு சட்டம் கொண்டு வரும் முன் இத்தொழிலில் உள்ளவர்களை கலந்தாலோசித்து தொழில் பாதிக்காத வகையில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். ஆனால் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக இச்சட்டம் உள்ளது எனக் குற்றம்சாட்டுகிறார் லாரி கூண்டு கட்டும் தொழில் கூடத்தின் உரிமையாளரான சேகர்.

மற்றொரு உரிமையாளரான தியாகராஜன், ”இந்தப் புதிய மோட்டார் வாகன சட்டத்தால் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்படும். கூண்டு கட்டுவதற்கான தரச் சான்று பெறவே 40 லட்சங்கள் செலவாகும். எனவே சிறிய அளவில் தொழில் செய்வோர் இதனைப் பெற முடியாமல் தொழிலை விட்டே வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். எனவே இத்தொழிலைக் காக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேதனையோடு தெரிவித்தார்.

இதையும் படிங்க:

ரூ.3 லட்சம் மதிப்புள்ள லாரி டயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள்!

Intro:புதிய மோட்டார் வாகன சட்டத்தால் நலிவடையும் சூழலை நோக்கி லாரி கூண்டு கட்டும் தொழில், இலட்ச கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம், மத்திய, மாநில அரசுகள் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரிக்கை.

Body:நாமக்கல் என்றாலே லாரித் தொழிலும், கோழிப் பண்ணைத் தொழிலும் தான் உடனடியாக ஞாபகத்திற்கு வரும். இந்நிலையில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலாக உள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தால் நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி கூண்டு கட்டும்(லாரி பாடி பில்டர்ஸ்) தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் உள்ளதாக கூண்டு கட்டும் தொழில் நிறுவனத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். புதிய சட்டத்தில் சர்வதேச தரத்திற்கு கூண்டு கட்டும் தொழிலை மாற்றும் நோக்கத்துடன் மத்திய அரசு இதனை கொண்டு வந்தாலும், ஏற்கனவே சிறு தொழிலாக செய்து இத்தொழிலை பாதுகாக்க எவ்வித நடவடிக்கை இல்லை என்றும், இத்தொழில் தற்போது ஈடுபட்டு வருபவர்கள் சுமார் 20 முதல் 30 ஆண்டுகள் அனுபவ அடிப்படையில் தொழிலை செய்து வரும் நிலையில், புதிய சட்டமானது கூண்டு கட்டும் தொழில் ஈடுபடுபவர்கள் 12 ஆயிரம் சதுர நிலம் சொந்தமாகவே, குத்தகை அடிப்படையில் நிலமாக இருக்க வேண்டும்,  அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் தொழிற் பயிற்சி (ஐ.டி,ஐ) கட்டாயம் படித்திருக்க வேண்டும், ஏ.ஆர்.ஏ.ஐ (ARAI) தர சான்று பெற்றிருக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட பல்வேறு கட்டுபாடுகள் சிறு, குறு தொழிலை போல் செய்து வரும் கூண்டு கட்டும் தொழில் நசுக்கப்பட்டு கார்பரேட் நிறுவனங்களின் கைக்கு செல்லும் நிலை உள்ளதாக இத்தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களும் இங்கு லாரிகளுக்கு  கூண்டு கட்டி செல்லும் நிலையில் டோல் கட்டணம், ஜி.எஸ்.டி வரியால் வெளிமாநிலம் மற்றும் வெளியூர் லாரிகளும் தற்போது நாமக்கல்லுக்கு பணிக்கு வராத நிலையில் மத்திய அரசு நவம்பர் 1-ம் தேதி முதல் கொண்டு வர உள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் லாரி கூண்டு கட்டும் தொழிலை நசுக்கி பெரு நிறுவனங்களுக்கு துணை புரிவது போல் உள்ளதாகவும் இதனால் 2 இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என்றும், புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வரும் போது லாரி கூண்டு கட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றும், கூண்டு கட்டுவதற்கான தரச்சான்று பெறவே 40 இலட்சம் செலவாகும் என கூறப்படும் நிலையில் அதனை சிறிய அளவில் தொழில் செய்வோர் இதனை பெற முடியாமல் தொழிலை விட்டே வெளியேற வேண்டிய நிலையே ஏற்படும் என்றும் இத்தொழிலை காக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் லாரி கூண்டு கட்டும் நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜன் நாமக்கல் பேட்டி.

அரசின் எவ்வித உதவியும் இன்றி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சிறு தொழிலாக லாரிகளுக்கு கூண்டு கட்டு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், புதியதாக அரசு சட்டம் கொண்டு வரும் முன் இத்தொழில் உள்ளவர்களை கலந்து ஆலோசித்து தொழில் பாதிக்காத வகையில் சட்டத்தை கொண்டு வராமல் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக இச்சட்டம் உள்ளதாக குற்றம்சாட்டுகிறார் லாரி கூண்டு கட்டும் தொழில் கூடத்தின் உரிமையாளர் சேகர் நாமக்கல் பேட்டி.

Conclusion:
Last Updated : Oct 5, 2019, 6:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.